நாடு திரும்பிய திகா சிறிகொத்தவுக்கு சென்று இரகசிய பேச்சு

தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி., நாடு திரும்பிய நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்று முக்கிய சந்திப்பில் பங்கேற்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை சந்தித்து கடந்தகால மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளார் எனவும் அந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இன்னும் ஒரிரு நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.

2015 ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய திகாம்பரத்துக்கு நல்லாட்சியின்போது அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டது. 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் யானை சின்னத்தின்கீழ்தான் திகாம்பரம் போட்டியிட்டார். 2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் முற்போக்கு கூட்டணியாக யானை சின்னத்தின்கீழ்தான் களமிறங்கியது.

எனினும், 2020 ஜனாதிபதித் தேர்தலில் திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவு வழங்கினார். பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டார்.

தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்குள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பாக மலையகத் தலைவர்களுக்கு உரிய இடமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் ஐ.தே.கவுடன் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளமை அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles