நாடு திரும்புகிறார் பஸில்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச, எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை வரவுள்ளார் என தெரியவருகின்றது.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சி கருதுகின்றது.

அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கட்சியை வெற்றிகரமாக வழிநடத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்தல், அவர்களை மீண்டும் கட்சி இயந்திரத்தில் இணைத்தல் மற்றும் கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் உள்வாங்குதல் போன்ற பணிகளை முன்னெடுப்பதற்கு பஸில் ராஜபக்ச கொழும்பு வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் எம்.பிக்கள், தற்போது மீண்டும் மொட்டு கட்சி பக்கம் படையெடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணசபைத் தேர்தலுக்குரிய பிரச்சார வியூகமும் பஸில் தலைமையிலேயே வகுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles