நாடு முடக்கப்படாது! இறுதி அஸ்திரமாக அதை வைத்திருக்கிறோம்!

நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது அவ்வாறான தீர்மானத்தை எந்த சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கு சிறந்த வழி தடுப்பூசி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles