பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துமாறுகோரும் தனிநபர் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (12) விவாதம் நடத்தப்படவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரால் இதற்கான தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டங்களில் நாட்கூலி முறைமையை ஒழித்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குமாறு குறித்த பிரேரணை ஊடாக வேலுகுமார் கோரியுள்ளார்.

