கொழும்பு நகரில் விசேடமாக புறக்கோட்டை மற்றும் குறுக்கு வீதிகளில் நாட்டாமை தொழிலாளர்களின் வண்டிகள் (தள்ளு வண்டிகள்) ஒழுங்கின்றி பயணம் செய்வதன் காரணமாக புறக்கோட்டை பிரதேசத்தில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் முச்சக்கரவண்டி, லொறி, வான் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால் இது தொடர்பாக சரியான வழிமுறை ஒன்றை அதற்காக தயாரித்து மக்களின் சிரமத்தை குறைக்குமாறு நகரசபை உறுப்பினர் ரெங்கசாமி ஜெய்சங்கர் நகர போக்குவரத்து குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான விசேட குழுவால் நாட்டாமை வண்டிகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று வாகன போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புறக்கோட்டை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, நாட்டாமை தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தள்ளு வண்டி உரிமையாளர்கள் சிலருடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அங்கு கீழே குறிப்பிட்டுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அனைத்து வண்டிகளையும் கொழும்பு மாநகர சபையின் கீழ் பதிவு செய்வது மற்றும் அவற்றிற்கு இலக்கம் இடுவது. நாட்டாமை வண்டியாளர்களை பதிவு செய்வது தொடர்பாக புறக்கோட்டை சமூக பொலிஸ் பிரிவு மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவது. நாட்டாமை தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்காக மேலங்கி ஒன்றை வழங்குவது. நாட்டாமை தொழிலாளர்களுக்கு வண்டிகள் வழங்கும் போது அவர்கள் தொடர்பான தகவல்களை வண்டி உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வண்டிகளை கொண்டு செல்லும் போது தனிவழிப் பாதைகளில் பயணிக்கும் போது வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டியதோடு, அவ்வாறு செய்யாவிட்டால் அது தொடர்பாக பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே வண்டிகளுக்காக கட்டணம் செலுத்தப்படுவதாக தள்ளுவண்டி உரிமையாளர்களால் கூறப்பட்டதோடு, இவ்வாறு ஒதுக்கப்படும் போது வாகன தரிப்பிட ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதோடு வீதிகளில் ஒழுங்கற்ற முறைகளில் வண்டிகளை நிறுத்துவதன் காரணமாக வாகன நெரிசல் ஏற்படுவதால் தள்ளுவண்டிகளுக்காக பாதையில் தனியான இடம் ஒன்றை ஒதுக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வண்டிகளில் ஏற்றப்படும் பொருட்களின் உயரத்தின் அளவு தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டியதோடு, அது தொடர்பில்பொலிசார் கவனம் செலுத்த வேண்டும்.
வண்டிகளை பதிவு செய்வதற்கு மற்றும் பதிவு செய்த இலக்கங்கங்களுடன் கூடிய தகட்டை பெற்றுக் கொள்வது தொடர்பாக செலவிடப்படும் பணம் தொடர்பில் நகர திறைசேரியில் வினவவும், மேலங்கி ஒன்றை பெற்றுக் கொடுக்கக் கூடிய வாய்ப்பு அல்லது அதற்காக அனுசரணையாளர்கள் ஒருவரை தேடுவது தொடர்பாக மேயர் உள்ளிட்ட சபை மற்றும் நகர ஆணையாளருக்கு அறியத் தர வேண்டும்.
தற்போது நாட்டில் நிலவும் தொற்று நிலைமை காரணமாக அனுசரணையாளர்கள் ஒருவரை கண்டுபிடிப்பது சிரமம் என்பதாலும் பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகளை பெற்றுக் கொடுப்பது மற்றும் மேலங்கி ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான பணத்தை ஒதுக்குவது தொடர்பாக நகர சபை திறைசேரியிடம் வேண்டுகோள் வினவ முடிவு செய்யப்பட்டது.