அகில இலங்கை தமிழ்மொழி தின போட்டிகளில் திறந்த போட்டி பிரிவில் நாட்டார் பாடல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவர்களையும் பொறுப்பாசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இரா.சிவலிங்கம் தலைமையிலும் நெறிப்படுத்தலிலும் பிரதி அதிபர்களின் வழிகாட்டலில் பாடசாலையின் முகாமைத்துவ அபிவிருத்தி குழுவினரால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நாட்டார் பாடல் போட்டியில் பங்குகொண்ட மாணவர்களான P.லோஷன், S.ஷெரான் வெஸ்லி, K.பிரியதர்ஷன், A.கிரிஷா, S.ஷாந்தி, S.மிதுர்ஷிகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பொறுப்பாசிரியர்களான மலர்ராஜ் மற்றும் திருமதி.யூகேஸ்வரி ஆகியோர் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் கிருஷ்ணராஜ் , பொருளாளர் குணசீலன் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்துடன் பா.அ.ச முன்னாள் செயலாளர் செந்தூரனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.

