நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஏழு மாதங்களில் 12 தசம் 9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியிலே இவ்வாறு ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் ஏற்றுமதி வருமானம் 7 ஆயிரத்து 678 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறித்த காலப்பகுதியில் இறக்குமதி செலவு குறைவடைந்துள்ளதுடன், இதன் பெறுமதி  11 ஆயிரத்து 315 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகையானது  3 தசம் 5 வீத வீழ்ச்சியாகுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த ஜூலை மாதம் இறக்குமதிக்கான செலவு 24 தசம் 8 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles