பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முயற்சிகளை முறியடிக்குமாறு மகா சங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக கர்தினால் தெரிவித்தார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் ரஞ்சித் அவர்கள், நாட்டை உயர்த்த சிந்தனையில் மாற்றம் பிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.