நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா?

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் பஞ்சம் ஏற்படும் என பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர். ஆனால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது. அறுவடையில் சற்று குறைவு ஏற்பட்டாலும், உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

கடந்த போகத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அறுவடையே, இன்றும் நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்கப்படும். நாம் விவசாயிகளை பாதுகாப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles