நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் தேசியபால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால் மா இறக்குமதியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நுவரெலியாவில் சில இடங்களில் நீண்ட வரிசையில் இருந்து பொது மக்கள் பால்மா கொள்வனவு செய்கின்றனர்.
இதுவும் குறிப்பிட்ட தினங்களில் மாத்திரமே விநியோகம் செய்யப்படுகின்றது.
பொதுக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பால் மா இருப்பு இல்லாததால், ஒரு பக்கெட் பால்வை கொள்வனவு செய்வதற்று சில பொருட்கள் கட்டாயமாக கொள்வனவு செய்ய வேண்டிய நிபந்தனைகள் இருப்பதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.










