நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் மஹரகம பொலிஸ் பிரிவில் பமுனுவ கிராம சேவகர் பிரிவு, பிலியந்தலை பொலிஸ் பிரிவில் ஹொன்னத்தர மற்றும் தல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவில் குட்டிவில கிராம சேவகர் பிரிவு, இரத்தினப்புரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டியபொலிஸ் பிரிவில் பல்லேகம, உடகம, புதிய நகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் பணாமுர பொலிஸ் பிரிவில் வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் வேவல்வத்த பொலிஸ் பிரிவில் ரத்கம கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.










