நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 423 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து 7 ஆயிரத்து 345 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.
