கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
29 ஆண்களும், 26 பெண்களுமே இவ்வறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நாட்டில் இன்று இதுவரையில் 642 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.