நாட்டில் 50 வீத நீரிழிவு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில் 50 சதவீதமான நீரிழிவு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிகழும் மரணங்களில் 83 வீதமானவை தொற்றாநோய்களால் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாத காரணத்தினால் நோயாளர்களுக்கு சிறுநீரக நோய் அல்லது மாரடைப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நோயாளர்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக வைத்தியர் சமிந்தி சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles