இலங்கைக்கு உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவே இருக்கின்றது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிநிதி ஆகியோருடன் பேச்சு நடத்தினேன். இலங்கைக்கு உதவுவதற்கு அவர்கள் விருப்பத்தை வெளியிட்டனர்.
அத்துடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பேச்சு நடத்தினேன். அந்நாடுகளும் தயாராகவே இருக்கின்றன.” – என்றார்.