நாட்டுக்கு பெறுமானத்தைக் கொண்டு சேர்க்கும் அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு.

பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி நாட்டுக்கு மதிப்புச் சேர்க்கும் அரசியலில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் தான் அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தப் பேரிடர் நேரத்திலும் கூட பாராளுமன்ற உறுப்பினர்,அமைச்சர்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய அமைச்சு என்பன கூட்டாக முடிவெடுக்க முடியாத அளவிற்கு சீரழிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“பிரபஞ்சம்” நிகழ்ச்சியில் இன்று (10) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான ‘பிரபஞ்சம்’திட்டத்தின் 8 ஆவது கட்டம் இன்று (10) ஆரம்பமானது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை,தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற,ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ முன்னோடித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தில், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (750,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை கிளிநொச்சி,பரந்தன் இந்துப் பாடசலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) வழங்கி வைத்தார்.

Related Articles

Latest Articles