ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இந்தியாவுடன் இணைப்புகளை உருவாக்குவது தொடர்பில் எதிரணியில் இருக்கும்போது மாறுபட்ட கருத்துகளை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்ட சகல ஒப்பந்தங்களுக்கும் தற்போதைய அரசாங்கமும் உடன்பட்டுள்ளது. எட்கா ஒப்பந்தம் பற்றி அரசின் நிலைப்பாடு என்ன?
எமது நாட்டு சக்தியை (Energy) இந்தியாவுடன் இணைப்பது, இந்திய ரூபா பயன்பாட்டை அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களுக்கு ரணிலுக்கு ஆணை வழங்கியது யாரென இதற்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பி இருந்தார். எனவே, ரணிலின் நிகழ்ச்சி நிரலை இந்தியாவுடன் செயல்படுத்துவதற்கு தற்போதைய அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதா” என நளின் பண்டார எம்.பி. வினவி இருந்தார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
“ அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. ரணிலுக்கு ஆணை கிடைக்கவில்லை. இலங்கையில் நாம் சக்தி ( (Energy) யை உற்பத்தி செய்வோம். மேலதிகமாக இருப்பவற்றை பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படையில் பிம்ஸ்டெக் வலய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என நாம் தெளிவாக கூறியுள்ளோம். இது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயம். வருமானமும் கிட்டும்.










