எமது துன்பத்தைக் கண்டு எம்மைப் பாதுகாக்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் கூடிய ஒரே தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதை எமது நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2015 மற்றும் 2019 இல் நாம் தவறவிட்டோம். அதனால் இந்த நாடு வீழ்ச்சியடைந்தது. நாம் அன்று கட்சி, நிறம் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கினோம். ஊடக பொய்களுக்கு ஏமார்ந்தோம். பேஸ்புக் பதிவுகளைப் பார்த்து ஏமார்ந்தோம். சரியான தலைவரை தெரிவு செய்யமுடியாமல் போனது. நாடு வீழ்ந்தபோது சரியான தலைவரை நாம் அடையாளம் கண்டோம்.
எமது துன்பத்தைக் கண்டு எம்மைப் பாதுகாக்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் கூடிய ஒரே தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதை எமது நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
எதிர்புறம் பொம்மைகளும் இரத்தத்தை கைகளில் தோய்த்த பசுந்தோல் போர்த்திய ஓநாய்க் கூட்டமும் இருக்கின்றன.
அந்த சோளக் காட்டு பொம்மைகளிடம் இருந்தும் ஓநாய்களிடம் இருந்தும் எமது நாட்டையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே, நாம் இன்று ஒரு தீர்க்கமான தருணத்தில் இருக்கின்றோம். இந்த தருணத்தில் நாட்டைப் பாதுகாக்கக் கூடிய ஒரே தலைவராக இருக்கும் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்வோம்.” – என்றார்.
