நாட்டை மீட்கும் இயலுமை ரணிலுக்கே உள்ளது! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு!

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு ,

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகவே போட்டியிடுகின்றார். ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு குழுவினர் சார்ந்தோ அல்லாமல் சுயாதீன வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை. எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எனது சமூக பொறுப்பை நிறைவேற்றும் வகையில், எக்கட்சியும் சாராது சுயாதீனமாக ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க முன்வந்தேன்.

மலையக வரலாற்றில், 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான, ரணில் தலைமையிலான நல்லாட்சி காலம் சிறப்பு மிக்கது. பல சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை அக்காலப்பகுதியில் மேற்கொள்ள முடிந்தது. அந்த வகையில், மலையக மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கு ரணிலே நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ளார். அவரோடு கைகோர்த்து பயணிப்பதே நாட்டுக்கும், நம் சமூகத்திற்கும் பயன் சேர்க்கும்.

ரணில் தலைமையிலான நல்லாட்சியில், 7 பேர்ச் நில ஒதுக்கீட்டுடன் தனி வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. மலையகத்தில் புதிய கிராமங்கள் உருவானது. மலையகத்திற்கான அதிகார சபை உருவாக்கப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாட்டுக்குள் மலையக தோட்டங்கள் உள்வாங்கப்பட்டன. மற்றும், நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக கிட்டிய பாடசாலை நல்ல பாடசாலை திட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான மலையக பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இவற்றுக்கு அங்கீகாரம் அளித்தது ரணில் தலைமையிலான அரசாங்கம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

நாட்டை கட்டியெழுப்ப சரியான ஒரு தலைவரை அடையாளம் காட்ட வேண்டியது எமது கடமை. அதனையே நான் முன்னெடுத்திருக்கின்றேன். இது ஒரு கடினமான முயற்சி என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அந்த சவாலை வெல்வதன் மூலமாக மட்டுமே எதிர்காலமொன்றை பற்றி சிந்தித்து பார்க்க முடியும். அதைவிடுத்து, அடுத்த தேர்தலில் நாம் எங்கே இருந்தால் வெற்றிபெற முடியும், எம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுகிய எண்ணப்பாட்டுடன் முடிவுகளை எடுத்தால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்த போலின் யுகத்திற்க்கே மறுபடியும் செல்ல வேண்டி ஏற்படும்.

தத்தமது எதிர்கால நலனை விட்டு, முழு நாட்டினதும், சமூகத்தினதும் நலனை முன்னிறுத்தும் அனைவரும், கட்சி, நிறங்களை விட்டு நாட்டுக்காக முன்னிற்கும் தலைவரை ஆதரிக்க முன்வர வேண்டும். எமது தாய் நாட்டின் முன்னிருக்கும் சவால்களை வெல்லும் தகைமையுடைய ஒரே தலைவர், ரணிலை ஆதரிப்பது மட்டுமே காலத்தின் கட்டாயமாக உள்ளது- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles