இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.