நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோவொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி
பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
ஆட்டோவை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்று உணவு பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டு வந்து மீண்டும் ஆட்டோவை இயக்க முற்பட்ட போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது
பிரதேசவாசிகள், வியாபாரிகள் ஒன்றிணைந்து முச்சக்கரவண்டி முழுமையாக தீ பரவாமல் இருக்க கடும் முயற்சிகள் மேற்கொண்ட போதும் பலன் அளிக்கவில்லை .
குறித்த தீ விபத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையானது.சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்










