நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா – கிளாசோ தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (20) பட்ட பகலில் வீடொன்றின் ஜன்னலை உடைத்து உள் நுழைந்தவர்களால் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டார் காலை நேரத்தில் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது , வீட்டினுள் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை அவதானித்ததுடன் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து நகைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்த இடத்தினை பார்த்த போது நகைகள் திருடப்பட்டு உள்ளதை அறிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சபவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
நுவரெலியா இரசாயன தடயவியல் பிரிவும் சம்பவ இடத்துக்கு வந்திருந்து. நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
நானுஓயா நிருபர்
