நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதியில் பங்களாவத்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்தை நோக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மீது நானுஓயாவிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் , கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியோரத்தில் தரித்திருந்த லொறி ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .
இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
