செய்தி : கிருஷ்ணசாமி முரளிதரன்
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு பாதையில் இன்று முற்பகல் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
இந்த பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறான வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மிகவும் சரிவான பிரதேசம் என்பதால் இவ்வாறு அடிக்கடி வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பிரதேசத்தில் விபத்துக்களை தவிர்ப்பதற்கு வாகனங்களை மிக அவதானமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த வீதி, மிகவும் சரிவான பிரதேசம் என்பதால் இந்த குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

