நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இன்று மாலை ஆட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறுக்கு வீதியில் அண்மையில் வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி சுற்றுலாவந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ சாரதியும் பலியாகினர்.
அந்த பகுதியிலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
நானுஓயா நிருபர்
