நுவரெலியா மாவட்டத்தில் கந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் ஆங்காங்கே மண்சரிவுகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது . தற்போது இவ்வீதியில் ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இரவு வேளையில் அடைமழை பெய்து வருகிறது .இதனால் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றன. இதனால் மண்மேடுகளுக்கும் மலைகளுக்கு சமீபமாக வாழும் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து இவ்வீதி ஓரங்களில் பல இடங்களில் மண்சரி ஏற்படுவதற்க்கான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தி. தர்வினேஷ்
