நானுஓயா விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி, நானுஓயா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனயீனமாக பஸ்ஸை செலுத்தியமையே, விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே 62 வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, மேற்படி வாகன விபத்தில் காயமடைந்தவர்களில் 47 பேர் சிகிச்சைகளின் பின்னர் இன்று வெளியேறியுள்ளனர். மேலும் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
