” நானே மேயர் வேட்பாளர்” – ரோஸி! இன்னும் முடிவில்லை என்கிறது ஐ.தே.க.!!

” கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நானே மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.”

இவ்வாறு கொழும்பு மாநகரசபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எனினும், கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளர் குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக முஜிபூர் ரஹ்மான் போட்டியிடுகின்றார்.

Related Articles

Latest Articles