” நான்கு மாதங்களுக்கு தேவையான சீனி கையிருப்பில் உள்ளது. எனவே, சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர நேற்று தெரிவித்தார்.
நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பஞ்சம் ஏற்பட்ட காலத்தில்போன்று சீனி வாங்கவும் மக்களுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் எவ்வித தட்டுப்பாடுமின்றி தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு சீனி கையிருப்பில் உள்ளது. எதிரணிகள் கூறுவதுபோல தட்டுப்பாடு ஏற்படவில்லை. மக்களுக்கு தட்டுப்பாடின்றி சீனியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது விடயத்தில் எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்றார்.
அதேவேளை, சீனி மாபியாக்களை இந்த அரசே பாதுகாக்கின்றது. வரி விலக்கை வழங்கிவிட்டு, இன்று ஊடக கண்காட்சிக்காக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன – என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.