“அமைச்சர் (ராமலிங்கம் சந்திரசேகர்) என்னை வசூல் ராஜா எனக் கூறியுள்ளார். நான் வசூல் ராஜா மட்டும் அல்ல, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என போட்டுக்கொள்ளுங்கள்.” -என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் சந்திரசேகருக்கும், அர்ச்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதன்போது புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெறும் வசூல் ராஜா, கூத்தாடி என அர்ச்சுனாவை அமைச்சர் விமர்சித்திருந்தார்.










