நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்: இதுவே பொது கருத்து என்கிறார் சாகர!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராக களமிறங்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவே தற்போது கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடியே இறுதியான – உறுதியான முடிவை எடுக்கும்.” எனவும் அவர் கூறினார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என அக்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles