‘நாயகன்’ தயார் – அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்’ – மொட்டு கட்சி அறிவிப்பு

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தயார்படுத்திவிட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் அவர் அறிவிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளது.

மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கான பதிலை தொலைக்காட்சி நாடகத்துடன் ஒப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வழங்கினார்.

” தொலைக்காட்சிகளில் மாலைவேளைகளில் நாடகங்கள் ஒளிபரப்படும். அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதற்காக பார்வையாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள், என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே காண்பித்துவிட்டால் அதில் பயன் இருக்காது.

எமது ‘நாயகன்’ தயார்.(ஜனாதிபதி வேட்பாளர்) ஏனைய ஏற்பாடுகளும் தயார். உரிய நேரத்தில் அறிவிப்பு விடுக்கப்படும்.” – என்றார் அவர்.

அந்த நாயகன் ரணில் விக்கிரமசிங்கவா என்ற கேள்விக்கு பதில் வழங்க அவர் மறுத்துவிட்டார்.

Related Articles

Latest Articles