நாட்டில் 24 இலட்சம் நாய்கள் காணப்படுவதாகவும் இவற்றின் உயிர்காப்பு மற்றும் நலன்களுக்காக 600 மில்லியன் ரூபாய் வருடாந்தம் செலவு செய்யப்படுவதாகவும் ஜீவகாருண்ய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றன.
வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி நாய்களின் நாய்க்கடி பாதிப்புக்களுக்கு உள்ளாவதை தவிர்க்க ஒரே வழி நாய்களுக்கு தடுப்பூசி வழங்குவதாகும் எனவும் இவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
மேற்படி திட்டத்தின் கீழ் நாய்களுக்கு தடுப்பூசி வழங்குதல் நாய் இனப்பெருக்கத்தை தவிர்த்தல் போன்ற விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.இதற்கிணங்க பிரதேச செயலகப் பிரிவு ஊடாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நடமாடும் தடுப்பூசி சேவை நடத்தப்படும். கட்டாக்காலி நாய்களுக்கு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியுடன் அவற்றுக்கு தடுப்பூசி வழங்கப்படல், நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றின் நோய்களுக்கான சிகிச்சை வழங்குதல் போன்ற விடயங்கள் இரத்தினபுரி மாவட்ட சுகாதார காரியாலய தகவல் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.










