நாரம்மல துப்பாக்கிச்சூடு – உப பொலிஸ் பரிசோதகர் கைது

நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உப பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் நேற்றிரவு லொறியொன்றை இரு பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது லொறி சாரதியின் தலை பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கியை வைத்துள்ளார். இதன்போது துப்பாக்கி இயங்கியதால் லொறி சாரதி உயிரிழந்தார்.

இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குவிந்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதோடு, ஆத்திரமடைந்த மக்கள், பொலிஸ் நிலையத்தின் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டனர். பொலிஸாரின் சொத்துக்களுக்கும் இக்குழுவினர் சேதம் விளைவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles