நாவலப்பிட்டி நகரத்தின் மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியின் இருபுறங்களிலும் உள்ள வாய்கால்களிலிருந்து வரும் துர்நாற்றத்தினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குட்படுகின்றனர்.
பிரதான வீதியில் காணப்படும் வாய்கால்களிலிருந்து வரும் துர்நாற்றம் தொடச்சியாக காணப்படும் ஒரு விடயமாகும். இதனால் அப்பாதை வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் நோயாளிகளுக்கு பல்வேறு வகையிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவ் வீதியின் வழியே காணப்படும் வியாபார ஸ்தாபனங்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வைத்தியாசாலை அருகில் இருப்பதால் கிழமை தோறும் வரும் கிளினிக் நோயாளர்கள் நீண்ட நேரம் பாதை ஓரத்திலே காத்திருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
அவ்வாறு நீண்ட நேரம் காத்திருக்கும் போது அப்பகுதியில் வரும் துர்நாற்றம் கிளினிக் நோயாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாவலபிட்டி வைத்தியசாலைக்கு செல்லும் வீதியின் வாய்கால்களை சுத்தப்படுத்தி தருமாறு பொதுமக்கள் நகரசபை அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
- நாவலப்பிட்டிய நிருபர் –
