நாளாந்தம் 15 சிறார்களுக்கு கொரோனா தொற்று

நாளாந்தம் கொரோனா தொற்றுடன் 15 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய 70 சிறுவர்கள் தற்போது சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles