நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை

நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை  தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மாதம் 5 ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

இதேவேளை, நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணை இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவினால் வெளியிடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles