நாளை அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்!

அண்மைய வரி திருத்தத்திற்கு எதிராக நான்கு மாகாணங்களில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என GMOA முன்னதாக அறிவித்திருந்தது.

இதேவேளை, ஏனைய பல மாகாணங்களின் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், அவசர சேவைகள் பாதிக்கப்படாது என்று GMOA தெரிவித்துள்ளது. மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ மருத்துவமனைகள் ஆகியவற்றில் வேலைநிறுத்தம் பாதிக்கப்படாது என GMOAவின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், புதன்கிழமை முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles