சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (28) நாடு திரும்பவுள்ளார்.
நாடு திரும்பிய பின்னர் ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை நடத்தவுள்ளார் எனவும், அதன்பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.
எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.










