இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
அவர் நாளை காலை 9 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்மில் ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து யாழ். நகரின் மத்தியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெறும் ஒரு நிகழ்விலும் அவர் பங்குகொள்கின்றார்.
அத்துடன், சிவில் சமூக பிரதிநிதிகளையும் கனடா தூதுவர் சந்திக்கவுள்ளார் என தெரியவருகின்றது.