நாவலப்பிட்டியவில் நடப்பது என்ன? 3 மாணவர்கள் உட்பட எழுவர்மீது கடும் தாக்குதல்

நாவலப்பிட்டிய நகரிலுள்ள பிரபல தமிழ் மொழிமூல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள்மீது குழுவொன்று மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பாடசாலையில் பயிலும் மாணவிகளுக்கு இளைஞர் குழு ஒன்று தொலைபேசி இலங்கங்களை வலுக்கட்டாயமாக கொடுத்து தினமும் சேட்டைகளில் ஈடுபட்டுவந்ததாகவும் இதனால் மாணவிகள் மன உளைச்சளுக்கு உள்ளாகி வருவதனை அவதானித்த சக வகுப்பு மாணவர்கள் சேட்டைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எடுத்துகூறி கண்டித்தமையே மாணவர்கள் மீதான தாககுதலுக்கு காரணமென பாதிக்கப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவிவந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த 6 ஆம் திகதி காயமுற்ற மாணவர்களில் ஒருவனின் வீட்டுக்கு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குறித்த மாணவனைத் தாக்க முற்பட்டததாவும் இதன் போது நடந்த கைகலப்பில் மோட்டார் .சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர் பின்னர் 7 ஆம் திகதியும் இரு மாணவர்களை மேற்குறிப்பிட்ட குழுவினர் தாக்கியதாகவும் எனினும் அவை சமசரம் செய்யப்பட்ட நிலையில்
நேற்று முன்தினமும் (08) பாடசாலை முடிந்து 1.30.மணியளவில் வீடு நோக்கி சென்ற மூன்று மாணவர்களையும் ஐந்து பேரடங்கிய குழு கடை ஒன்றுக்குள் இழுத்துச் சென்று தாக்கியதாகவும் இதன் போது தடுக்கச்சென்ற மாணவன் ஒருவனின் சகோதர் உட்பட தாக்குதல் மேற்கொண்ட மூவர் அடங்களாக ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் குறித்து இரு தரப்பிலும் இருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கம்பளை நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles