நாவலப்பிட்டிய கதிரேசன் பாடசாலையின் அதிபர் அலுவலகம் உடைப்பு – கலைக்கூடமும் சேதம்

நாவலப்பிட்டிய கதிரேசன் ஆரம்ப பாடசாலையின் அதிபர் , உப அதிபர் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலைக்கூடமொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை வேட்டையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

திருடர்களுக்கு பாடசாலையும் ஒரு களமாக மாறியுள்ளமை வேதனையளிக்கின்றது  என   பாடசாலையின் அதிபர் பெ.லோகேஸ்வரன் தெரிவித்தார்.

செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles