அரசமைப்புக்கு முரணான வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம் இடக்கூடாது – என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட்டாலும் அதில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரை படுத்திய பின்னரே சட்டம் அமுலாகும். நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு இதுவரை சபாநாயகர் அந்த உறுதிப்படுத்தலை வழங்கவில்லை.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் அரசமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற நிலையற்கட்டளைச் சட்டங்களுக்கு முரணாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, சபாநாயகர் அதில் கையொப்பமிடக்கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடாகும்.” – என்றார்.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களில் சில திருத்தங்களை, சட்டம் நிறைவேற்றும்போது அரசு உள்வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.










