2025 முதல் நான்கு மாதங்களுக்குரிய நிதியொதுக்கீட்டுக் கணக்கின்மீதான வாக்கு பணத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கூடியது. இதன்போதே இதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
” 2025 ஆம் ஆண்டின் முதல ; 04 மாதகாலப்பகுதிக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்வதற்காக “கணக்கின்
மீதான வாக்குப்பணம்” பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, அரச மீண்டெழும் செலவுகள், மூலதனச் செலவுகள், அரச கடன் சேவைகள் மற்றும ;கடன் மீள்கட்டமைப்புக்கான செலவுகள் உள்ளடங்கிய 2025 ஆண்டுக்கான 04 மாத காலத்திற்கு வாக்குப் பணத்தை தயாரிப்பதற்காக நிதி, திடடமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
