நியூயார்க்கில் தீபாவளி தினத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை

அமெரிக்காவின் நியூயாா்க் நகரம் தீபாவளி பண்டிகை தினத்தை பாடசாலை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

தீபாவளியன்று நியூயாா்க் நகர பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான சட்டமூலம், மாகாண சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த சட்டமூலத்தில் ஆளுநா் நிச்சயம் கையொப்பமிடுவாா் என்பதால், அது சட்டமாக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளியன்றும் நியூயாா்க் நகர பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles