நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் (படங்கள்)

தலவாக்கலை, பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்திவாறு, கறுப்பு கொடிகளை பிடித்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும் கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாக பறிக்க வேண்டுமெனவும் நல்ல கொழுந்து எடுத்து கொடுக்க வேண்டுமென தோட்டத் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு குறைவாக கொடுத்தால் கிலோ கணக்கில் சம்பளம் தருவதாகவும் இதனால் தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தோட்ட அதிகாரி முறையாக தோட்டத்தை வழி நடத்தவில்லை என தெரிவித்தும் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

காலை 8 மணி முதல் பகல் 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை சும்மா நடத்தாமல் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டதுடன் தமக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் இதுவரை முறையாக கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டதுடன் குறிப்பிட்ட தோட்டங்களை நடத்த முடியாவிட்டால் தமக்கு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles