நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
” சுயாதீனமாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானம் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல .பல மாதங்களாக பல்வேறு தரப்பினருடன் நடத்திய நீண்ட கலந்துரையாடலின் விளைவு அது. ” என்றும் அவர் குறிப்பிட்டார்.