“ அநுரகுமார திஸாநாயக்கதான் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட கடைசி ஜனாதிபதியாவார். அவர் நிச்சயம் குறித்த ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பார்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மக்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளது. அந்த போராட்டத்தை ஜனநாயக வழியில் தொடர்ந்து முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். இது ஆரம்பம் மட்டும்தான். எனவே, நாட்டுக்கு நாம் சிறந்த முன்மாதிரியை வழங்குவோம். மக்களின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
மக்கள் தேர்வு செய்த இந்த ஜனாதிபதிதான் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட கடைசி ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். இனி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருக்கபோவதில்லை. குறித்த ஜனாதிபதி முறைமையை அவர் இல்லாதொழிப்பார். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
நாடாளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படும்.” – என்றார்.










