இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வங்குரோத்தடைந்துள்ளது, அதனால்தான் எமது தலைவர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளை விமர்சித்து அரசியல் நடத்துகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ கணபதி கணகராஜ் ஆசிரியராக பணியாற்றியபோது எனக்கு சிறப்பாக கல்வி கற்று கொடுத்தார். ஆனால் அவர் அரசியல்வாதியான பிறகு அவருக்கு நான் பாடமெடுக்க வேண்டியுள்ளது.
திகாம்பரம் நிர்மாணித்த 25 வீடுகள் லயத்தை விட மோசமாக இருப்பதாகவும், அதற்கு கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது எனவும் கணபதி கணகராஜ் விமர்சித்துள்ளார்.
ஐயா கணகராஜ் அவர்களே… தாங்கள் பிறந்த பிரதேசமான பொகவந்தலாவ பிரதேசத்தில் மட்டுமே திகாம்பரம் கட்டிய வீட்டு கணக்கினை பட்டியலிடுகின்றேன், தாங்கள் மீண்டும் பொகவந்தலாவைக்கு வந்து பாருங்கள்
🔴செல்வகந்த தோட்டத்தில் 108 வீடுகள்
🔴பொகவான தோட்டத்தில் 100 வீடுகள்
🔴குயினா தோட்டத்தில் 100 வீடுகள்
🔴பெற்றசோ தோட்டத்தில் 50வீடுகள்
🔴கொட்டியாகல தோட்டத்தில் 100 வீடுகள்
🔴கெம்பியன் தோட்டத்தில் 50 வீடுகள்
🔴லின்போர்ட் தோட்டத்தில் 25 வீடுகள்
🔴கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் 50 வீடுகள்
🔴கிவ் தோட்டத்தில் 50 வீடுகள்
என புதிய கிராமங்களை உருவாக்கி உள்ளார்
ஐயா கனகராஜ் அவர்களே, உங்கள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் கட்டிய ஒரு வீட்டை காட்டுங்ள்?
தற்போதைய உங்கள் தலைவர் அமைச்சர் ஜீவன் கட்டிய ஒரு கிராமத்தை காட்ட முடியுமா?
கடந்த மாதம் ஒரே நாளில் 10 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டீனீர்களே, அந்த வீட்டை நிலவிலா கட்டினீர்கள்?
திகாம்பரத்திற்கு கிடைத்த 4 வருடங்களில், 70 வருடமாக அமைச்சு பதவியில் இருந்த இ.தொ.கா செய்யாத சேவையை செய்துள்ளார்.” – என்றுள்ளது.
