ஹப்புத்தளையிலிருந்து, தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


பூஜை செய்வதற்காக இன்று அதிகாலை, ஆலயத்துக்குவந்த பூசகர், ஆலய கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

ஆலயத்தில் உள்ள இரண்டு உண்டிகளிலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகையும் களவாடப்பட்டுள்ளது.
ராமு தனராஜா
